கொழும்பில் உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை.

0
20

உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை நாட்டிற்கு அழைத்துவந்து பாலியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் வௌ்ளவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வௌ்ளவத்தை பகுதியை சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பினூடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழில் பெற்றுத்தருவதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, பின்னர் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here