கொழும்பில் மீண்டும் போலீஸ் பதிவு நடைமுறைப்படுத்த படுகிறதா ?

0
5

வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக பொலிஸ் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இம்மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், அரச அல்லது தனியார் காணிகளில் இடம்பெறும் நிர்மாணங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்போரின் விவரங்கள் திரட்டப்படும்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 நாட்களுக்குள் உங்களின் பிரதேசத்துக்கு வருகை தரும் பொலிஸ் அதிகாரிகள் வழங்கும் படிவத்தைப் பெற்று, தற்காலிகமாக உங்கள் வசிப்பிடத்தில் காணப்படும் நபர்களின் விவரங்களைக் குறிப்பிட்டு அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அல்லது அருகாமையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here