நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் இனங்காணப்பட்டு வரும் நிலையில் கொழும்பை தவிர வேறு பகுதிகளில் இதுவரையில் (நேற்று (02)மாலை வரை) டெல்டா வைரஸ் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் அவதானமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான புத்தாண்டு கொத்தணியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 1,61 629 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 2,335 தொற்றாளர்கள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறிருக்க மூன்றாம் அலையில் மாத்திரம் 2,511 கொவிட் -19 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கொவிட் -19 செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.