கொவிட் பயணத்தடை காரணமாக நாளாந்த தொழிலை இழந்தவர்களுக்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினரின் நிவாரணப்பணி.

0
49

கொவிட் 19 இன் மூன்றாவது அலை நாட்டை அச்சுறுத்தி வரும் நிலையில் நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பயணத்தடை காரணவாக நாளாந்த தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் பணியினை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது.

முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் உலருணவு நிவாரணப் பணி ஆனது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் செயலாளர் இ.குகநாதன் பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு நகர்பகுதியில் யாசகம் செய்வோர் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை செய்யும் பெண்கள் மற்றும் பாதணிகள் பழுதுபார்க்கும் சேவையில் ஈடுபவோருக்கும் உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

அதேபோன்று வாகரை வாகனேரிக் கிராமத்தில் தொழில் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் வாவுணதீவுப் பிரதேசத்தில் ஊத்துமடு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதுடன், அனாதரவற்ற மக்களை தேடி ஆதரவு வழங்குவதுடன், தொழில் முனைவேருக்கு சுயதொழில் சார் உதவிகளையும் முனைப்பு நிறுவனம் மாவட்டம் பூராகவும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

UTHAYA KANTH.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here