அரச உத்தியோகத்தர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ண மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்தமையினை முன்னிட்டு மாவட்ட செயலக அணியின் விளையாட்டு வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்துகொண்டு மாவட்ட செயலக அணியினரை வாழ்த்தியதுடன் நினைவுச்சின்னம் உள்ளிட்ட சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.

இதன்போது கடந்த 5 வருடங்களாக மாவட்ட செயலக அணி வெற்றியிட்டி மாவட்ட செயலகத்திற்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளமையினை முன்னிட்டு மாவட்ட அரசாங்க அதிபரினால் விசேடமாக பாராட்டுக்களை தெரிவித்ததுடன், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

அதே வேளை மாவட்ட செயலக அணியினர் பெற்றுக்கொண்ட கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணத்தை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here