கோழி இறைச்சி, எரிவாயு,பால்மா விலைககள் அதிகரிக்க பட மாட்டாது.

0
83

பால்மா, எரிவாயு, சிமெந்து, மறறும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் ,இதுவரை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கொவிட் தொற்று காரணமாக உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்காக கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த பொருட்களின் விலை அதிகரிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தொடர்ந்தும் இருப்பதாக ,ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயுவின் விலை தொடர்பில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள உப குழு மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு அமைய நிர்ணயிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here