கோவிட் தடுப்பூசி ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாரபட்சம் இன்றி அனைவருக்கும் சமமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

0
52

கோவிட் தொற்றை எதிர் கொள்ளும் நடவடிக்கையை பொறுத்தமட்டில், 1980ம் ஆண்டுகளில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நெருக்கடியின்போது செய்த அதே தவறை உலக நாடுகள் இப்போதும் செய்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“1980ம் ஆண்டுகளில் களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நெருக்கடியின்போது செய்த அதே தவறை உலக நாடுகள் இப்போதும் செய்கின்றன. எச்.ஐ.வி., எய்ட்ஸ் சிகிச்சையானது வளர்ச்சி அடைந்த நாடுகளில் பரவலாக ஆன பின்னர், குறைவான வருமானம் கொண்ட நாடுகளை சென்றடைய 10 ஆண்டுகள் ஆனது” என குறிப்பிட்டார்.

கோவிட் தடுப்பூசி அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்கனவே பரவலாகி இருக்கிறது, ஆனால் பல ஏழை நாடுகளில் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போய்ச்சேரவில்லை.

இந்நிலையில், கோவிட் தடுப்பூசி ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாரபட்சம் இன்றி அனைவருக்கும் சமமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று” அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here