சகல விதமான லஞ்ச் சீட்டுக்களுக்கும் ( LUNCH SHEET) தடை.

0
37

சகல வகை லஞ்ச் சீட்களையும்( LUNCH SHEET) தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டே அமைச்சர் ,அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, லஞ்ச் சீட்டை தடை செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், அத்தீர்மானம் உரிய
முறையில் செயற்படுத்தப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில், குறைந்தது நாளொன்றுக்கு 10 மில்லியன் லஞ்ச் சீட்டுகள் சுற்றாடலில் கலப்பதாகவும்
லஞ்ச்சீட் உக்குவதற்கு 3 வருடங்கள் செல்லும் என்பதால், லஞ்ச்சீட்டால் மண்ணுக்குள் சேரும்
பிளாஸ்டிக் துகள்கள் 200 வருடங்கள் மண்ணில் இருக்குமென நிபுணர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார்.

இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் லஞ்ச் சீட்டை தடை செய்வது குறித்து, சுற்றாடல்
அமைச்சால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போது இது குறித்து புதிய
வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமலேயே உத்தரவு பிறப்பிக்க முடியும்  என்றார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here