சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 440 பேர் கைது .

0
54

கடந்த மூன்று மாத காலப்பகுதியில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில், கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய 153 படகுகளும், கடற்றொழில் உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், பிரதேச கடற்றொழில் திணைக்களங்கள் மற்றும் காவல் நிலையங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here