சத்யராஜ் என் மீது நம்பிக்கை வைத்து பவர்ஃபுல் கதாபாத்திரத்தை கொடுத்தார்.

0
52

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வர வேண்டியவரை சத்யராஜ் தன் படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடிக்க வைத்து அவருடைய சினிமா வாழ்க்கையை கெடுத்து விட்டதாக ரசிகர் ஒருவர் கிண்டலடிக்கும்படி பதிவிட்டுள்ளார்.   தமிழ் சினிமாவில் கலகலப்பான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இந்த வயதிலும் தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு அதே சமயம் அனைவரும் வியக்க வைக்கும் அளவுக்கு சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதிலும் பாகுபலி படங்களில் கிடைத்த கட்டப்பா கதாபாத்திரம் எல்லாம் வேற லெவல். ஹீரோவாக வெற்றி படங்கள் கொடுத்த சத்யராஜ் தன்னுடைய மார்க்கெட் குறைந்ததும் அப்படியே கேரக்டர் ரோலில் தாவினார்.  முன்னணி நடிகர்களுக்கு அப்பா, நடிகைகளுக்கு அப்பா, மாமா, மச்சான் போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்பேர்பட்ட சத்யராஜ் தன்னுடைய கேரியரில் ஒரே ஒரு படத்தை இயக்கி இருந்தார். அதுதான் வில்லாதி வில்லன். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மினிஸ்டர் அம்சவள்ளியாக கலக்கியிருப்பார் கவர்ச்சி நடிகை விசித்ரா. அனைவரும் கவர்ச்சியை எதிர்பார்த்த நிலையில் சத்யராஜ் மட்டும் தான் நல்ல கதாபாத்திரத்தை இவருக்கு கொடுத்தார். இதுகுறித்து ரசிகர் ஒருவர், தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வரவேண்டிய விசித்ராவுக்கு சத்யராஜ் படத்தில் நடித்த பிறகு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது என கிண்டலடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசித்ரா, சத்யராஜ் என் மீது நம்பிக்கை வைத்து அந்த பவர்ஃபுல் கதாபாத்திரத்தை கொடுத்தார் எனவும், தன்னை ஒரு கவர்ச்சி காட்சிப்பொருளாக பார்த்த பலருக்கும் மத்தியில் அவர் மட்டும்தான் நான் ஒரு சிறந்த நடிகை என்பதை உணர்ந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here