சமூகத்தில் ஐந்து மடங்கான தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை – இலங்கை மருத்துவ சங்கம்.

0
21

நாட்டில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் டெல்டா திரிபு தொற்றுக்குள்ளாகும் நோயாளிகள் அதிளவில் கண்டறியப்படலாம் என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

நாளொன்றில் நடத்தப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பிசிஆர் பரிசோதனைகளே நாளாந்தம்  பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்குக் காரணமாகும் என்றும் சமூகத்தில் ஐந்து மடங்கான தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை என்றும் மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பாக மேல் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்படாத நியாயமான எண்ணிக்கையிலான டெல்டா திரிபு தொற்றுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். 

கொரோனா தொற்றாளர்கள், மரணங்கள் மற்றும் அறிகுறி கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயம் எதிர்காலத்தில் உயரும் என்று அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here