சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை உயர்த்துவதற்கான கோரிக்கையை நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்கவில்லை.

0
11

சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் புதிய விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை வரை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஒத்திவைத்துள்ளதாக அறியமுடிகிறது.

இந்த மூன்று பொருட்களின் விலைகளையும் பெரிய அளவில் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலையை 1,000 ரூபாயாலும் சீமெந்தின் விலையை 180 ரூபாயாலும் மாவின் விலையை 20 ரூபாயாலும் உயர்த்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலைகளை உயர்த்துவதற்கான கோரிக்கையை நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்கவில்லை என்பதால் புதிய விலை அறிவிப்பு மிகவும் தாமதமானது என்று அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி  தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here