சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 ​பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

0
26

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என அறியப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 ​பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேரையும் எதிர்வரும் 05 திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு , மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான், காணொளி மூலம் நேற்று (29) உத்தரவிட்டார்.

சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிகளுக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடியைச் சேர்ந்த  63 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மீதமான 56 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 56 பேருடன் சஹ்ரானின் சகோதரி, அவரின் கணவன், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி, பிரயாணம் செய்வதற்காக பஸ்வண்டியில் ஆசனத்தை பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட  62 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here