சிங்கபூர் பிரஜை கைது.

0
25

சிங்கபூர் பிரஜை வசிக்கும், தலங்கம பெலவத்தை வீட்டை திடீர் சோதனைக்கு உட்படுத்திய போது, அங்கிருந்து சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகத்தின் பேரில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

ஹாஷ் எண்ணெய் போதைப்பொருள், கேரள கஞ்சா 50 கிராம், ஹாஷ் எண்ணெய் தடவப்பட்ட பிளாஸ்டிக் குப்பிகள் மூன்று, மின்னணு தராசு, கஞ்சா புகையை இழுக்கும் இரண்டு உபகரணங்கள், ஜேர்மனியில் உற்பத்திச் செய்யப்பட்ட குவிநாசி என்றழைக்கப்படும் வாயு பிஸ்டல், இரும்பு தட்டுகள், கறுப்பு நிறத்திலான வில், அந்த வில்லுக்கு பயன்படுத்தப்படும் அம்புகள் 21 மற்றும் சிறிய வில் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிட்ட பொருட்களை சந்தேகநபரான சிங்கபூர் பிரஜை, ஏன்? வைத்திருந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவர், தலங்கம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here