சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை டுவிட்டர் நிறுவனம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவில் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நேற்று அளித்த புகாரின் பேரில் டெல்லி பொலிஸார், டுவிட்டர் இந்தியா மற்றும் டுவிட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
குழந்தைகள் ஆணையம் சமர்பித்த டுவிட்டர் பக்கங்கள், டுவிட்டர் வெளியிட்ட படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை டுவிட்டர் நிறுவனம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.