சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தில் மறைந்துள்ள மர்மங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

0
32

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் இல்லத்தில் பணிப்புரிந்துவந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தில் மறைந்துள்ள மர்மங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அவர், “15 வயதான சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். 

சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.“ எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here