சிறுவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து 4700 முறைப்பாடுகள் .

0
22

இந்த வருடத்தில் முதல் 6 மாத காலப் பகுதியில் இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து 4700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றில் 73 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பானது என்றும் , இந்த முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த அதிகார சபையின் தலைவர் முதித் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணத்தை தொடர்ந்து சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு சபையினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் வீடுகளில் பணியாற்றும் சிறுவர்கள் தொடர்பில் அதிகார சபை தகவல்களை சேகரித்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here