சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆரையம்பதியில் பலா மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

0
103

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்கள்” என்னும் தொனிப்பொருளிற்கு அமைவாக பட்டினியற்ற நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஒரு இலட்சம் பலாமரக்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டத்திட்டமானது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்றில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும்
பலாமரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமானது பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சிறுவர் கழகங்களின் பங்களிப்புடன் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வுகளில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எல்.விவேகானந்தராஜா மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here