சீனாவில் வெள்ளத்துக்கு 99 பலி .

0
36

சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை – வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 99 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொடா்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இத்துடன், இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 99 ஆக உயா்ந்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

எனினும், உயிரிழந்தவா்களின் யாா், அவா்கள் எந்த வகையில் உயிரிழந்தனா் என்பது போன்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஹெனான் மாகாணத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவா்களில் 14 போ் சுரங்க ரயில் பயணிகளும் அடங்குவா்.

இந்த மழை காரணமாக ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here