சீனா இலங்கையில் காலூன்றுவதை நாங்கள் எதிர்க்கிறோம் -எம்.ஏ.சுமந்திரன்

0
24

மனித உரிமைகள் சார்ந்த அபிலாசைகளைக் கொண்டுள்ள தமிழ் மக்கள் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்குவதை விரும்புவதில்லை.

எனவே சீனா இலங்கையில் காலூன்றுவதை தாங்கள் எதிர்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவன் மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாணைக்கு இன்று மன்றில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மனித உரிமைகள், ஜனநாயகம் என்பவற்றை மதிக்கின்ற ஏனைய நாடுகள் இலங்கைக்கு ஆலோசனை வழங்குவது போன்ற விடயங்களை ஆதரிக்கலாம்.

ஆனால் ஜனநாயகத்துக்கும் எதிர் கருத்துக்களுக்கும் போதிய மதிப்பு வழங்காத சீனா இலங்கையில் காலூன்றுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here