சுகாதார வழிகாட்டல்களை பின் பற்றாமல் திருமணம்,சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்த போது பலர் தப்பி ஓட்டம்.

0
12

முந்தல்- கொத்தன்தீவு பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி, திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மணமகன், மணமகள் உள்ளிட்ட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, முந்தல் வைத்திய சுகாதார பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுள் 10 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொத்தன்தீவு வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்தாகவும், இதில் கலந்துகொண்ட எவரும் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்வை சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்த போது, பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த வாரமும் குறித்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி பல திருமண நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்தாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here