செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக நாடு முழுவதும் தடையற்ற இணையத்தள வசதி.

0
9

செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக நாடு முழுவதும் தடையற்ற இணையத்தள வசதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு இணையத்தள வசதிகளை வழங்கும் நோக்கிலேயே, இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கடல் வழியாக 7 சப்மேரின் கேபிள் ஊடாக, இலங்கைக்கு இணையத்தள இணைப்பு தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கும் இணையத்தளத்தை, சைபர், 3G மற்றும் 4G ஆகிய தொழில்நுட்பங்களின் ஊடாக பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனினும், பல்வேறு காரணிகளினால், பின்தங்கிய பிரதேசங்களுக்கு இணையத்தள வசதிகளை வழங்க முடியாத நிலைமை தற்போதும் ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக தடையற்ற இணையத்தள வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணையத்தள வசதிகளை வழங்கும் அமெரிக்க நிறுவனமான STARLINK நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here