சேதன பசளையை இறக்குமதி விவகாரம் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு எவ்விதமான பிரச்சினையும் ஏற்படுத்தாது.

0
13

சீன நிறுவனத்திடமிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு எடுத்த முடிவு, இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர செயற்பாடுகளுக்கு எவ்விதமான
பிரச்சினையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, இந்தத் தடையை எதிர்த்து எந்த நிறுவனமும் மேன்முறையீடு செய்யலாம் அதுவே ஜனநாயகம் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த விடயமானது இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும்
பாதுகாப்பு தொடர்பானது. எனவே, இதனை இராஜதந்திர பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது என தெரிவித்த அவர்,இந்த உரப் பிரச்சினையை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சினையாக மாற்றவும் முயற்சிக்க கூடாது என்றார்.

இதேவேளை சேதன பசளை விநியோக பொறிமுறைத் தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் விவசாயத்துறை அமைச்சரால் அறிவிக்கப்படும் என்றார்.

நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் இந்த வாரத்திலிருந்து உரம் விநியோகத்துக்கு தேவையான அனைத்து பொறிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here