டயகமவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

0
97

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வீட்டுப் பணிப்பெண்ணான சிறுமி எரிகாயமடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நியாயம் கோரி அவரது சொந்த ஊரான டயகமவில் நேற்று (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

டயகம ஈஸ்ட் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு மணி நேரம் முன்னெடுத்தனர்.

உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோரினர்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி இடம்பெறாதிருக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும் எனவும் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here