டொலரின் பெறுமதி அதிகரிப்பதாக பொய் பிரசாரங்கள் செய்யப்படுகிறது, இதை எதிர்கொள்வதற்கு நான் எதற்கும் தயார்- பசில் ராஜபக்ஸ

0
28

நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

இதே போன்று முறையான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்

உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று (17) நடைபெற்ற சந்திப்பின் போதே நிதியமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நிதி கிடைக்க, வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

நிதியமைச்சின் பொறுப்புகளை உரிய வகையில் நிறைவேற்றுவதுடன் கட்சியின் பொறுப்புகளையும் சரியான முறையில் முன்னெடுப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் நாட்டில் 1.2 பில்லியன் டொலர் கையிருப்பு காணப்பட்டதாகவும், தற்போது 4 பில்லியனாகக் காணப்படும் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதன் மூலம், பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

டொலரின் பெறுமதி அதிகரிப்பது தொடர்பில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு நான் எதற்கும் தயார் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here