தடுப்பூசி போடுவதில் இலங்கையின் முன்னேற்றம்.

0
5
vaccine beneficiary, Amit Sonawane, getting his shot.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் 12 க்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகில் வளர்ந்த நாடுகளை விட எமது நாட்டின் தடுப்பூசி திட்டம் வெற்றியடைந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.உலகில் இரண்டு தடுப்பூசிகளை வழங்குவதில் இலங்கை 4வது இடத்தில் உள்ளது.

இந்த மகாத்தான பங்களிப்பை செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும், பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை என்பவற்றிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். மேலும் ஜனாதிபதி அவர்களின் விசேட கவனத்தின் காரணமாக அதிகளவிலான பணம், கூடுதலான அர்ப்பணிப்பு மற்றும் அனைத்து வேலைகளும் அவரது தீவிர முயற்சியுடன், தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடி இந்த தடுப்பூசி திட்டத்தை வழங்குவதற்கான சுழலை உருவாக்கி தரப்பட்டுள்ளது.மேலும், 14 மில்லியன் மேல் மூன்றாம் பூஸ்டர் தடுப்பூசி முற்பதிவு செய்யப்பட்டு தற்போது ம‌க்களு‌க்கு விரைவாக போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சிலர் வதந்தியை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.

சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத வதந்திகளைப் பரப்பி, அதிக எண்ணிக்கையிலான பக்க விளைவுகளை கற்பனை செய்து அதனை மக்களிடம் கூறுகிறார்கள். இருப்பினும் இந்த கற்பனை செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை. இந்த நேரங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவை தவிர உண்மையை அறிந்து செயல்படுதல் எமது குடும்பத்தையும் பாதுகாக்கும்.

உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் எமது நாட்டில் குறைவடைந்து வரும் கொரோனாவைக் குறித்து அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். இந்த சந்தர்ப்பத்தில், தடுப்பூசி போடுவதை அனைவரும் தங்கள் முதன்மைப் பொறுப்பாகக் கருதுவதும் சிறந்ததாகும். ஆகவே அனைவருக்கும் முதலில் மூன்றாவது தடுப்பூசியை போட முன்வருவோம். மேலும் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள்.இந்த கொரோனா மீண்டும் வராமல் தடுக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்க அனைவரும் ஒன்றிணைவோம்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here