தனிமைப்படுத்தல் செயல்முறை ஒரு தண்டனையாகவோ அல்லது தடுப்புக்காவல் நடவடிக்கையாகவோ இருக்க கூடாது.

0
16

சுகாதார நடவடிக்கையான தனிமைப்படுத்தல் செயல்முறை ஒரு தண்டனையாகவோ அல்லது தடுப்புக்காவல் நடவடிக்கையாகவோ இருக்க கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் சுகாதார வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்படுவதற்கு இடமளிக்க கூடாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அந்த சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றவர்களுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் பொருந்தும் எனவும் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து வைப்பது தவறான செயல் செயல் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here