எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது கருத்து தெரிவித்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரின்ஜித், தற்போதையை டீசல் விலை உயர்வு காரணமாக 15 சதவீத பஸ் கட்டண உயர்வுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் கட்டாயமாக நூற்றுக்கு 25 சதவீத கட்டண அதிகரிப்பிற்கு செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரை 94.25 ரூபாவுக்கு வழங்க அரசாங்கத்திற்கு இயலுமை உள்ளதாக கனிய வள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.