தனி விமானத்தில் அமெரிக்கா பறக்க இருக்கும் ரஜனிகாந்த் .

0
53

சில நாட்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த பின் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். அவரின் மனைவி ஆராத்தி எடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்லப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக அங்கு செல்ல போவதாகவும், சிகிச்சை முடிந்த பின் சிறிது நாட்கள் ஓய்வெடுக்க போவதாகவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக மத்திய அமைச்சர்களிடம் அனுமதிக்காக பேசியுள்ளார் ரஜினி. உடனே ஒப்புதலை அரசு வழங்கி விட்டதாம். இந்திய அரசின் தனி விமானத்தில் 14 பேர் பயணம் செய்வது போன்ற அனுமதியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் தேறி விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர்களின் வேண்டுதல் கண்டிப்பாக பலிக்கும். விரைவில் சூப்பர் ஸ்டார் நாடு திரும்பி இன்னும் சில படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here