தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் அதிரடி திரைப்படம் ‘ஜகமே தந்திரம்‘

0
50

கார்த்திக்  சுப்புராஜ்  இயக்கத்தில்  தனுஷ் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்‘.

வைநொட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளதோடு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல ஹொலிவூட்  நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார்.

இத் திரைப்படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் ட்ரெய்லர் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ எனும் வசனத்துடன் முடியும் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here