தயக்கமில்லாது 12 வயதுக்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள பெற்றோர்கள் முன்வர வேண்டும் என விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மாணவர்கள் அனைவரும் பாடசாலைகளுக்கு செல்ல உள்ளனர். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தடுப்பூசிகளை தங்களது பிள்ளைகளுக்கு வழங்க சில பெற்றோர்கள் தயங்கி வருகிறார்கள் எனவும் அவர் இதன்போது கூறினார்.
பிள்ளைகளுக்கு தயங்காது தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் கூறுவர்களாக இருந்தால் அது உண்மையில் முக்கியமான ஒன்றாக இருக்கும். கொரோனா வைரஸிலிருந்து சிறியவர்கள், பெரியவர்கள் என பார்க்காது அனைவரையும் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.