தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0
20

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும் என்னும் தலைப்பில் இன்றைய தினம் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச சபைகள், நகர சபைகளில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் காலத்திலேயே தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், ஊழியர்கள் நிரந்தரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கடந்த நல்லாட்சிக் காலத்தில் தாங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here