தலைவி 2ஆம் பாகம் தயாரிக்க எடுக்க படக்குழுவினர் ஆலோசனை.

0
41

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக தயாராகி உள்ள தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலா, சசிகலாவாக பூரணா ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துள்ளது. தியேட்டர்களை திறந்ததும் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தலைவி 2-ம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் பாகத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல்வேறு தடைகளை கடந்து முதலமைச்சர் ஆவது வரை உள்ள காட்சிகள் இடம்பெற்று உள்ளது. இரண்டாம் பாகத்தில் முதலமைச்சரான பிறகு நிகழ்த்திய சாதனைகள். அரசியல் போராட்டங்கள், சொத்து குவிப்பு வழக்குகள், கைது, மீண்டும் தேர்தலில் நின்று ஆட்சியை கைப்பற்றியது.

இறுதியில் மரணம் வரை உள்ள சம்பவங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. தலைவி படத்தின் வசனகர்த்தா மதன்கார்க்கி கூறும்போது, “தலைவி படத்தில் இடம்பெற வேண்டிய சில சுவாரசியமான தகவல்களை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தலைவி 2ஆம் பாகம் எடுத்தால் அந்த தகவல்கள் படத்தில் சேர்க்கப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here