தாதியர் வித்தியாலத்தின் மாணவர்கள் பத்துப் பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0
18

பதுளை தாதியர் வித்தியாலத்தின் மாணவர்கள் பத்துப் பேருக்கு கொரோனா
தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பதுளை சுகாதார வைத்திய
அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.

அந்த மாணவர்களில் பத்துப் பேருக்கும் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றாளர்கள் 680 ​பேர் அடையாளம் காணப்பட்டனர்.

நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4
இலட்சத்து 91 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, மேலும் 31
கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இந்த மரணங்கள் அனைத்தும் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்
திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும் 11 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்த 31
பேரில் 23 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here