தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம் -2021

0
422

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பின் தென் மேற்கே அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வுகள் 03.07.2021 திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கொவிட் சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களின் வருகையுடனும், பங்குபற்றலுடனும் ஆலய திருவிழா நடைபெறுகின்றது.

மட்டக்களப்பில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களின் மக்களால் நாளாந்த திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. தற்போதைய கொவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருவிழா நிகழ்வுகள் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8:30 மணிக்கு முன்னராக நிறைவு பெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு முருக பக்தர்களால் சின்னக்கதிர்காமம் என செல்லப்பெயருடன் அழைக்கப்படும் தாந்தாமலை முருகன் ஆலய திருவிழாக்கள் வரும் 25:07:2021 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தில் அதிக நேரம் கூடி நிற்காமல் சுகாதார முறைகளைப் பேணி வழிபாடுகளில் அடியவர்கள் ஈடுபட முடியும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here