திடீர் மரண விசாரணை அதிகாரியொருவர் கைது.

0
14

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்காக 3,000 ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில், திடீர் மரண விசாரணை அதிகாரியொருவர், இன்று (03) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம பகுதியில் மரண விசாரணை அதிகாரியாக கடமையாற்றும் குறித்த நபரை  இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 12ஆம் திகதியன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபருக்கு மரணச்சான்றிதழ் வழங்கவே அவர் 3,000 ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.

உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் மரணச் சான்றிதழைக் கோரியபோது குறித்த அதிகாரி இஞ்சம் கேட்டதாக அவரது சகோதரி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்தே சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here