திஸ்ஸமஹாராம வாவியின் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனர்கள் இராணுவத்தினர் இல்லை .

0
88

திஸ்ஸமஹாராம வாவியின் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனர்கள் எமக்குத் தெரிந்த வரை இராணுவத்தினர் அல்லர் எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல எமது குற்ற விசாணைப் பிரிவின் விசாரணைக்கமைய அந்த ஆடை சாதாரண ஆடை என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சில நேரங்களில் வாகன திருத்தும் இடங்களில் பணிபுரிபவர்கள் இவ்வாறு ஆடை அணிந்திருப்பர் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சீன இராணுவத்துக்கு ஒப்பான ஆடையை சீனர்கள் அணிந்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரும் இராணுவத்தினரும் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் அதற்கமைய அந்த ஆடை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ ஆடை மட்டுமே என உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here