துடுப்பாட் வீரர்கள்பிரிவில் கேன் வில்லியம்சனும் பந்துவீச்சாளர்கள் பிரிவில் பேட் கம்மின்ஸும் முதல் இடத்தில் உள்ளார்கள்.

0
61

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் துடுப்பாட் வீரர்கள்பிரிவில் கேன் வில்லியம்சனும் பந்துவீச்சாளர்கள் பிரிவில் பேட் கம்மின்ஸும் முதல் இடத்தில் உள்ளார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

இதை அடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதல் இடத்திலும் அவுஸ்திரேலியாவின் ஸ்மித் 2 ஆம் இடத்திலும் உள்ளார்கள். முதல் 10 இடங்களில் இந்தியாவின் விராட் கோலி 5 ஆம் இடத்திலும் ரிஷப் பந்த் 6 ஆம் இடத்திலும் ரோஹித் சர்மா 7 ஆம் இடத்திலும் உள்ளார்கள்.

பந்துவீச்சாளர்கள் பிரிவில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 2 ஆம் இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஜடேஜா 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 4 ஆம் இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here