துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடுகிறது.

0
20

பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவங்களுக்குரிய சாட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்காக ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய அலகுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் வகையிலேயே இந்த அலகுகளும் நிறுவப்படவுள்ளன. கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கே அங்கிகாரமளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடுவதால் குறித்த சாட்சிகள் ஒளிப்பதிவு செய்து பெற்றுக் கொண்டு சமர்ப்பிப்பதற்கும் இதனூடாக அனுமதி கோரப்பட்டுள்ளது.

அது சாட்சியங்கள் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் காணொளிப்பதிவு செய்யும் அலகொன்றைத் தாபித்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here