தேசிய கல்வியியற் கல்லூரிகளை இன்று (15) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0
29

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளை இன்று (15) திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள், தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்று மீண்டும் திறக்கப்படும் மேற்படி கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பிக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றுநோய் வேகமாகப் பரவியதால் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 திகதியன்று இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டு தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

குறித்த கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here