தேவபுரத்தில் பிரதேச மக்கள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்

0
25

மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தேவபுரத்தில் பிரதேச மக்கள், இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சுமார் 25 ஏக்கர் அரச காணியை தனிநபர் ஒருவர் சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனத்  தெரிவித்து, அதனைத் தடுத்து நிறுத்துமாறும் கோரியே, இந்தப் போராட்டத்தை தேவபுர மக்கள் முன்னெடுத்தனர்.

மேற்படி காணிக்குள், நேற்றுக் காலை ஒன்று கூடிய மக்கள், கையில் சுலோகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும்  கோஷங்கள் எழுப்பியவாறும் சமூக இடைவெளியைப் பேணி,  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்கள்.

இக்காணியானது தாங்கள் அறிந்தவரை ‘தேர் இழுத்த வெம்பு’ என அழைக்கப்பட்ட காட்டுப் பிரதேசமாகும் எனவும் அக்காலப் பகுதியில் விறகு சேகரித்தும் நாவல் பழம் பொறுக்கியும் இங்குள்ளவர்கள் வாழ்ந்தனர் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

எனவே, எவரும் அதனை உரிமை கோர முடியாது என்றும் தங்களுக்கு இவ்விடத்தில் காணி வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கிரான் பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

இக்காணி அனுமதிப் பத்திரங்கள், 2008ஆண்டு 12 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே,  இந்தக் காணியில் பொதுமக்கள் சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here