தொழிற்சங்க நடவடிக்கையால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.

0
32

10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கக்கோரியும் இன்னும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தும், அரச மற்றும் அரச, தனியார் இணைந்த ஊழியர் சங்கம், சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை நேற்று (08) முன்னெடுத்திருந்தது.

இந்த கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தபால் நிலையங்களின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

தாதியர் சங்கமும் போராட்டத்தை நடத்தினர். தொழிற்சங்க நடவடிக்கையால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.  

இதனால், வைத்தியசாலைகளுக்கு வருகைதந்திருந்த பெருமளவிலான நோயாளர்கள், பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here