தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன.

0
239

செய்யும் முறை: 

நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

  • இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
  • இடது கையால் வலது காதுமடலைப் பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.
  • அதே போல் வலது கையால் இடது காதைப் பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
  • தலை நேராய் பார்த்தபடியே முச்சுக் காற்றை விட்டபடியே உட்கார வேண்டும். சிரமம் இல்லாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்கார வேண்டும்.
  • மூச்சை இழுத்துக்கொண்டே எழவேண்டும். வேகமாக செய்யக் கூடாது. பொறுமையாகச் செய்ய வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்.

 மேலைநாட்டு மருத்தவ ஆராய்ச்சிகளும் சிபாரிசுகளும்: ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை

.

தோப்புக்கரணம்செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில்  ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

தோப்புக்கரணம் போடுவதன் பயன்கள்:

  • மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன.
  • இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.
  • நாடிகள் சுத்தம் பெறுகின்றன.
  • நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள், தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here