நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

0
32

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர் கடந்த 19-ஆந் திகதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அங்கு  மாயோ வைத்தியசாலையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மருத்துவ சிகிச்சை முடிந்து  நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரும்புகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here