நடிகை சமந்தா ‘பேமிலி மேன்-2’ ‘வெப்’ தொடரில் நடிப்பதற்காக ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

0
54

நடிகை சமந்தாவும் ‘பேமிலிமேன்-2’ மூலம் ‘வெப்’ தொடருக்கு வந்துள்ளார். இந்த தொடர் சமீபத்தில் வெளியானது. இதில் சமந்தாவின் போராளி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. எதிர்ப்புகளும் கிளம்பின.

இதையடுத்து மேலும் புதிய ‘வெப்’ தொடர் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது. சமந்தா ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் வாங்குகிறார். ‘பேமிலி மேன்-2’ ‘வெப்’ தொடரில் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here