நாகபுரம் விடியல் விளையாட்டு மைதான புனரமைப்பினை ஆரம்பித்துவைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

0
69

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைகள் திட்டத்திற்கமைய அரசாங்கம் நாடு பூராகவும் பல்வேறுபட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதற்கு அமைவாக இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி வளப்படுத்த அவர்களுக்கு தேவைப்பாடாகவுள்ள விடயங்களை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளையும் வழங்கிவருகின்றது.

அந்த வகையில் பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் முன்மொழிவிற்கு அமைவாக மீள்குடியேற்ற அமைச்சினால் வாகரை நாகபுரம் விடியல் விளையாட்டு மைதான புனரமைப்பிற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்நிதியின் ஊடாக குறித்த விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் வேலைத்திட்டமானது பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் எனும் கோட்பாட்டிற்கு அமைய அவர்களது குறைகளை இனங்கண்டு அவர்களுக்கான தேவைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றி வரும் நிலையில், குறித்த பகுதி இளைஞர்களின் தேவை எம்மால் இனங்காணப்பட்டு தற்போது இவர்களுக்கான விளையாட்டு மைதானத்திற்கு முதற்கட்டமாக நிதிகளை பெற்றுக்கொடுத்து ஆரம்பப் பணிகளை தொடக்கிவைத்திருக்கின்றோம் எதிர்காலத்திலும் இப்பகுதி இளைஞர்களுக்காக பல்வேறு செயற்திட்டங்களை பெற்றுக்கொடுக்க தயாராக இருக்கின்றோம் என விளையாட்டு மைதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்ததன் பின்னர் பிரதம விருந்தினர் உரையினை ஆற்றும் போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராஜாங்க அமைச்சரின் செயலாளர்கள், பிராந்திய இணைப்புச்செயலாளர்கள் உள்ளிட்ட விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், குறித்த திட்டத்தினை தமக்கு பெற்றுக்கொடுத்தமைக்காக பிரதேச இளைஞர்கள் இராஜாங்க அமைச்சருக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here