நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளது.

0
6

அநியாயமான முறையில், எரிபொருட்களின் விலைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஜே.வி.பி., இந்த விலை அதிகரிப்பை எதிர்த்து, நாடளாவிய ரீதியில் இன்றும் (23) நாளையும் (24) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

அதிகரித்திருக்கும் எரிபொருள் விலையேற்றத்துக்கு ஏற்ப, மக்களுக்கு நிவாரணத்தை வழங்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மஹரகம, கம்பஹா, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நுவரெலியா, அனுராதபுரம் மற்றும் கினிகத்ஹேன ஆகிய நகரங்களில் இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும்

பாணந்துறை, காலி, அக்குரஸ்ஸ, பதுளை, குருணாகல், புத்தளம், ரிக்கிலகஸ்கட, பூண்டுலோயா, கதுறுவெல மற்றும் திருகோணமலை ஆகிய பிரதான நகரங்களில் நாளையும் (24) இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ஜே.வி.பி அறிவித்துள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here