நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .

0
28

நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு, அதுதொடர்பில் வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

“கொரோனா வைரஸ் ஆபத்தான பகுதிகள்” என தலைப்பிட்டு வெளியிடப்பட்டிருக்கும் அந்த வரைபடத்தின் பிரகாரம் , முழு நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உள்ளனர்.

ஜூலை 24ஆம் திகதியுடன் முடிவடைந்த 14 நாள்களில் தொடர்பிலான விபரங்களே அதில் உள்ளன. மேல் மாகாணத்தில் ஆகக் கூடுதலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கேகாலை, புத்தளம், மாத்றை, இரத்தினபுரி மற்றுமு் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100க்கும் மேற்​பட்டதொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஆகக்குறைந்த தொற்றாளர் இணங்காணப்பட்டுள்ளார்.

அங்கு ஒரேயொருவருக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், மேல் மாகாணத்தை ​​பொறுத்தவரையில் களுத்துறை மாவட்டத்தில் 389 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 441 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பில் 119 பேர் இணங்காணப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

மாவட்டங்களின் பிரகாரம், யாழ்ப்பாணத்தில் 58 பேரும், நுவரெலியாவில்
46 பேரும் பதுளையில் 91 ​பேரும் மட்டக்களப்பில் 58 பேரும் திருகோணமலையில் 23 பேரும், வவுனியாவில் அறுவரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அந்த புள்ளிவிவரத் தகவல்களில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here