நாடு திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் மூவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0
20

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு டர்ஹமில் உள்ள வீதிகளில் சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டனர்.

அத்துடன், அவர்கள் மூவரையும் உடனடியாக நாட்டிற்கு வருமாறு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

குறித்த கிரிக்கெட் வீரர்கள் உயிர்க்குமிழி (பயோ பபுள்) விதிமுறைகளை மீறியுள்ளார்களா என்பதை அறிய இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நாடு திரும்பிய மூலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here