நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

0
6

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், தேவையில்லாமல் மருந்துகளை வீடுகளில் பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண(Prof. Channa Jayasumana) மக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனா மற்றும் இந்தியாவில் இருந்து கடன் வசதியின் கீழ் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால், எவ்வித தட்டுப்பாடும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு நபர்களால் பரப்பப்படும் வதந்திகளால் நாட்டில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும், போதியளவு மருந்துகள் உள்ளதால் மக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீன அரசுகள் போதுமான மருந்துகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளன என்றார். மருந்துகள் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் சிலர் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வீட்டில் சேமித்து வைத்துள்ளதாகவும், செயற்கையான மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாக சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இது தவிர, வீட்டில் நீண்ட நேரம் வெவ்வேறு வெப்பநிலை நிலைகளில் சேமித்து வைக்க வேண்டிய மருந்துகள் தன்னிச்சையான தரத்தில் இருக்கக்கூடும், மேலும் அவற்றின் பிரச்சினைகள் எழலாம், எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here